முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு



கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார்.

கவுதமன் பேட்டி

திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து வருகிறது. எங்களின் ஒரே நம்பிக்கை சுப்ரீம் கோர்ட்டு தான். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மீறி அணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதால் கோர்ட்டு தானாகவே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து தமிழக மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

மிகப்பெரிய போராட்டம்

அரியலூரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்துடன் கூடிய காலண்டர் விற்பனை செய்ததாக கூறி புத்தக கடை நடத்தும் இளவரசன் என்பவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அதே அரியலூரில் மணல் திருட்டு தொடர்ந்து நடப்பதை போலீசார் கண்டு கொள்வது இல்லை. சிமெண்டு ஆலைகளால் அங்குள்ள விளை நிலங்கள் பாழாகி விட்டன. நிலக்கரி எடுப்பதற்கு மேலும் 20 கிராமங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.
தூத்துக்குடியில் 14 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக முடப்படும் என்று முதல்&அமைச்சர் அறிவித்தார். இப்போது பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஈவு, இறக்கமின்றி அனுமதி அளித்துள்ளது. அந்த ஆலையை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும். எல்லையெனில், ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் தமிழக இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தும் நிலைமை உருவாகும்.

அரசியல் கட்சி

நல்லவர்கள் ஆட்சி செய்தால் போராட வேண்டிய தேவையே வராது. ஆகவே அரசியல் எனும் ஆயுதத்தை நாங்கள் கையில் எடுக்கப் போகிறோம். இதற்காக விரைவில் கட்சி தொடங்க உள்ளோம். நாங்கள் திடீரென கருப்புத் துண்டு போட்டு, ஏழைகளை கட்டிப் பிடித்து படம் பிடித்துக் கொண்டு அரசியலுக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக மக்களோடு களத்தில் நின்று போராடி, மண்ணுக்காக குரல் கொடுத்து வருகிறேன். திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களின் பக்கம் வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசியல் கட்சி தொடங்குகிறோம்.
தங்களை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த், கமலஹாசன் கூறுகின்றனர். அவர்கள் கோபுரத்தில் இருந்து கோட்டைக்குள் குதிக்க பார்க்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அன்னை தெரசா போல் தொண்டு செய்யட்டும். பின்பு மக்கள் விரும்பி அழைத்தால் அரசியலுக்கு வாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி
நாள்: 26-12-2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...