முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!   தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவராக திருமதி. ம.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். அரசு திட்டங்களை மக்களின் கரங்களில் நேரடியாக சென்று சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  நீர்மேலாண்மை மீதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். பசுமை மீது அவர் காட்டும் அக்கறை நெகிழ வைக்கிறது. நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நாவல் மரக்கன்றுகளை வழங்கி, நாவல் மரங்களின் பயன்களை மக்களிடம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே அவருடைய பரபரப்பான பணிகளுக்கு இடையே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் அவர் பங்கேற்று சிறப்பித்தார்.  75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தேனி நீர்நிலைகள் பாதுகாப்பு குழு என்ற தன்னார்வ அமைப்பால் தூர்வாரப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி, தேனியின் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து தன்னார்வ சேவையாக...