முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தேனியில் களைகட்டும் புத்தகத் திருவிழா... அறிவுக்கடலில் ஆனந்தமாய் குவியும் மக்கள்!

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டாவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.  60-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரமாண்ட மேடை, டிஜிட்டல் திரைகள் என மிகச் சிறப்பான ஏற்பாட்டுடன் புத்தகத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மக்கள் ஆர்வம் மக்கள் ஆர்வத்துடன் புத்தகத் திருவிழா அரங்கில் குவிந்து வருகின்றனர். குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் குதூகலமாக குவிந்த வண்ணம் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர்.  விழா நுழைவு வாயில் அருகில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கலை நயமிக்க பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலன் புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்தி...
சமீபத்திய இடுகைகள்

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!   தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவராக திருமதி. ம.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். அரசு திட்டங்களை மக்களின் கரங்களில் நேரடியாக சென்று சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  நீர்மேலாண்மை மீதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். பசுமை மீது அவர் காட்டும் அக்கறை நெகிழ வைக்கிறது. நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நாவல் மரக்கன்றுகளை வழங்கி, நாவல் மரங்களின் பயன்களை மக்களிடம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே அவருடைய பரபரப்பான பணிகளுக்கு இடையே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் அவர் பங்கேற்று சிறப்பித்தார்.  75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தேனி நீர்நிலைகள் பாதுகாப்பு குழு என்ற தன்னார்வ அமைப்பால் தூர்வாரப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி, தேனியின் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து தன்னார்வ சேவையாக...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: போக்சோ சட்டத்தில் 109 வழக்குகள் தேனி மாவட்டத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று காலம் காலமாக பெருமிதமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கண்கள் பிஞ்சுப் பருவத்திலேயே நசுக்கப்பட்டு, நரக வேதனைக்குள்ளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையானது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சம் பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பதில் தேனி மாவட்டமும் விதிவிலக்கில்லை. இங்கும் சில ஆண்டுகளாக இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ப...

தேனி மாவட்டத்தில் 636 பேர் தற்கொலை

மனம் உடைந்தால் மரணம் தான் தீர்வா? தேனி மாவட்டத்தில் 636 பேர் தற்கொலை விபத்து உயிரிழப்புகளை விட அதிகம் தேனி மாவட்டத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் 636 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இது விபத்துகளில் உயிர் இழந்தவர்களை விட அதிகம். மரணத்தை தேடும் மனிதர்கள் உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் மரணம் நிச்சயம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டது தான் மனித வாழ்க்கை. மனிதனாய் பிறந்த ஒவ்வொவரும் ஒருநாள் மரணம் அடைந்து தான் ஆக வேண்டும். இறப்பை நோக்கி நகர்ந்து செல்வதே வாழ்க்கை. ஆனால், அந்த மரணத்தை தானே விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடாது. மரணத்தை தேடிச் செல்லும் மனிதர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை முழுமையாய் வாழாமல் அழித்துக் கொள்கின்றனர். விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்படுவது என்பது எதிர்பாராதவை. ஆனால், தற்கொலை என்பது தாதே தேடிக்கொள்வது. எந்த ஒரு மனிதனுக்கும் பிற மனிதனின் உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. அதேபோல், யாருக்கும் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது. 636 பேர் தற்கொலை தற்கொலைக்கு முயன்றாலே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இட...

இதயம் வரை இறங்கிய இனிப்பே மீண்டு(ம்) வா!

'மதினி, நீங்க அச்சு முருக்கு போட்டா தான் உடையாமல் வரும். இங்கிட்டு வந்து உட்காருங்க' என புத்தாடை அணிந்து வந்த அண்ணன் மனைவியை, புகைந்து கொண்டு இருக்கும் விறகு அடுப்புக்கு பக்கத்தில் உட்கார வைப்பதில் நாத்தனாருக்கு தனி சந்தோஷம். 'அரிசி முருக்குக்கு மாவு பிசைய சொன்னால், கூழ் காய்ச்சி வச்சிருக்கா பாரேன்' என நாத்தனாரை வம்புக்கு இழுப்பதில் மதினிக்கும் மகிழ்ச்சி பொங்கும். இவை எல்லாம் பண்டிகை காலங்களில் வீடுகளில் நிகழும் சுவாரஸ்யங்கள். ஆனால், இது எல்லாம் ஒரு காலத்தில் என்று சொல்லும் அளவுக்கு மக்களின் வாழ்வியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலகாரத்துக்காக ஒரு பண்டிகை என்றால் அதை தீபாவளி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பலகாரம் இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதிரசம், முருக்கு, அச்சு முருக்கு, சீடை, வடை, பஜ்ஜி போன்றவை தான் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் பலகாரமாக இருக்கும். பிற்காலங்களில் தான் குலோப்ஜாமூன் இந்த பட்டியலில் இடம் பிடித்தது. பல வீடுகளில் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு போட்ட சண்டைகள் எல்லாம் பலகாரம் செய்யும் பரபரப்பில், பாசத்தில் காணா...

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை... வயதுக்கு தக்கபடி மாறிவரும் தீபாவளி

ஆயிரங்களை செலவு செய்து தீபாவளி கொண்டாடுபவர்களை விட, அப்பாவிடமோ, தாத்தாவிடமோ அழுது அடம்பிடித்து சில நூறு ரூபாய்களை பெற்று, அதில் வாங்கிய பட்டாசுகள் படபடவென வெடித்து மகிழும் சிறுவர்களின் மகிழ்ச்சியின் அளவு பெரியது. கொண்டாட்டம் என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். மகிழ்ச்சியான இந்நாளில் மற்றவர் மனநிலை எப்படி என்பதையும் கொஞ்சம் பார்ப்போம். 2 வயதுக்கு குறைவான குழந்தைகள் தங்களின் பெற்றோர் மத்தாப்பு கொளுத்தி மகிழ்வித்தாலே அவர்களின் முகம் புன்னகை பூக்கும். அப்போது மத்தாப்பு ஜொலிப்பு அழகா? மழலையின் புன்னகை அழகா? என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடத்தி விடலாம். 2 வயதை கடந்த குழந்தைகள் தாங்களே மத்தாப்பு கொழுத்த விரும்புவர். மத்தாப்பு எவ்வளவு நீளமாய், எவ்வளவு பிரகாசமாய் எரிகிறதோ அந்த அளவுக்கு முகம் மலர்வர். மனமெல்லாம் உலகில் தங்களை போல் மகிழ்ந்தவரில்லை என்ற வகையில் கொண்டாடித் தீர்க்கும். 6 வயதை கடந்த சிறுவர், சிறுமிகளுக்கு மத்தாப்பை கடந்து பட்டாசு வெட...