தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டாவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். 60-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரமாண்ட மேடை, டிஜிட்டல் திரைகள் என மிகச் சிறப்பான ஏற்பாட்டுடன் புத்தகத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மக்கள் ஆர்வம் மக்கள் ஆர்வத்துடன் புத்தகத் திருவிழா அரங்கில் குவிந்து வருகின்றனர். குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் குதூகலமாக குவிந்த வண்ணம் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர். விழா நுழைவு வாயில் அருகில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கலை நயமிக்க பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலன் புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்தி...