முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேனியில் களைகட்டும் புத்தகத் திருவிழா... அறிவுக்கடலில் ஆனந்தமாய் குவியும் மக்கள்!

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டாவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். 

60-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரமாண்ட மேடை, டிஜிட்டல் திரைகள் என மிகச் சிறப்பான ஏற்பாட்டுடன் புத்தகத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வத்துடன் புத்தகத் திருவிழா அரங்கில் குவிந்து வருகின்றனர். குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் குதூகலமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர். 

விழா நுழைவு வாயில் அருகில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கலை நயமிக்க பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளி வாசகர்களும் சிரமமின்றி அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கான புத்தகங்களை வாங்கிக் கொள்ள ஏதுவாகிறது.

புத்தக தானப்பெட்டி


சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளுக்கான புத்தக தானப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் புத்தக தானம் அளித்தனர். அந்த புத்தகங்கள் சிறையில் உள்ள நூலகங்களில் வைக்கப்பட்டு, சிறை கைதிகள் வாசிக்க பயன்படும்.

மாணவர்களுக்கு பரிசுக் கூப்பன்

புத்தகத் திருவிழாவுக்கு அரசு பள்ளி, அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்படுகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.100 மதிப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.200 மதிப்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூப்பனை மாணவ, மாணவிகள் புத்தக அரங்குகளில் கொடுத்து அதன் மதிப்புக்கு இணையான புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம்.

கலை நிகழ்ச்சிகள்

புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. முதல் நாளில் விஜய் டி.வி. புகழ் ஈரோடு மகேஷ் குழுவினரின் கலகலப்பான கலை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாவது நாளில் முனைவர் பர்வீன் சுல்தானா பங்கேற்று சிகரம் நம் உயரம் என்ற தலைப்பில் உரையாற்றினார். மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து தமிழினிமை என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

பட்டிமன்றங்கள்

புத்தகத் திருவிழாவில் நான்காம் நாளான மார்ச் 6-ந்தேதி நாய்கள் கண்காட்சி, மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அந்தக் காலத்திலா? இந்தக் காலத்திலா? என்ற தலைப்பில் கவிஞர் கவிக்கருப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.

ஐந்தாம் நாள் நிகழ்வாக நேர்படப்பேசு என்ற தலைப்பில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றுகிறார். ஆறாம் நாள் நிகழ்வாக மார்ச் 8-ந்தேதி மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணியளவில் மகளிர் உரிமை வாழ்விற்கு பெரிதும் துணை நிற்பது இலக்கியங்களா? திரைப்படங்களா? என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.

கிராமிய கலை நிகழ்ச்சி

ஏழாம் நாள் நிகழ்வில் உலகை காட்டும் கண்ணாடி என்ற தலைப்பில் கவிஞர் என்.மாதவன், சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றுகின்றனர். எட்டாம் நாள் நிறைவு நாள் விழாவில் பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது.

நம்ம ஊரு... நம்ம திருவிழா...! கொண்டாடி மகிழ்வோம்! வாசிப்பை வசமாக்குவோம்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு

கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார். கவுதமன் பேட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்து...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...