மனம் உடைந்தால் மரணம் தான் தீர்வா?
தேனி மாவட்டத்தில் 636 பேர் தற்கொலை
விபத்து உயிரிழப்புகளை விட அதிகம்
தேனி மாவட்டத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் 636 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இது விபத்துகளில் உயிர் இழந்தவர்களை விட அதிகம்.
மரணத்தை தேடும் மனிதர்கள்
உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் மரணம் நிச்சயம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்டது தான் மனித வாழ்க்கை. மனிதனாய் பிறந்த ஒவ்வொவரும் ஒருநாள் மரணம் அடைந்து தான் ஆக வேண்டும். இறப்பை நோக்கி நகர்ந்து செல்வதே வாழ்க்கை.
ஆனால், அந்த மரணத்தை தானே விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடாது. மரணத்தை தேடிச் செல்லும் மனிதர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை முழுமையாய் வாழாமல் அழித்துக் கொள்கின்றனர். விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்படுவது என்பது எதிர்பாராதவை. ஆனால், தற்கொலை என்பது தாதே தேடிக்கொள்வது. எந்த ஒரு மனிதனுக்கும் பிற மனிதனின் உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. அதேபோல், யாருக்கும் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது.
636 பேர் தற்கொலை
தற்கொலைக்கு முயன்றாலே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. இன்றைக்கு இந்த உலகம் பல மாற்றங்களை கண்டுள்ளது. அறிவியல், மருத்துவத்தில் பல சாதனைகளை படைத்துள்ளது. பல அடுக்கு முன்னேற்றத்தை கண்டுள்ளது. இவை எல்லாம், மனிதர்களாய் பிறந்து சாதித்த பல சாதனையாளர்களால் நிகழ்ந்தவை. அவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையை அவர்கள் அர்த்தமுள்ளதாய் மாற்றி இருக்கிறார்கள். அதனால், அவர்களால் வாழ்வில் வெற்றி பெற முடிந்ததோடு, வரலாற்றிலும் இணைந்து மரணத்துக்கு பிந்தைய நினைவுகளில் வாழும் வாழ்க்கை பெற முடிந்தது.
நாடு முழுவதுமே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 351 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 285 பேர் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை வாசித்துக் கொண்டு இருக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அன்றாடம் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தற்கொலை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 22 மாத கால கட்டத்தில் மாவட்டத்தில் 636 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
விபத்துகளை விட அதிகம்
இது விபத்துகளில் உயிர் இழந்தவர்களை விட அதிகம். கடந்த ஆண்டு விபத்துகளில் 232 பேர் பலியாகி உள்ளனர். விபத்துகளை விட தற்கொலையால் 119 உயிர்கள் அதிகம் பறிபோய் உள்ளது.
குடும்ப பிரச்சினை, காதல் தோல்வி, தேர்வு பயம், தேர்வில் தோல்வி, தொழில் நஷ்டம், நோய்க்கொடுமை, வரதட்சணை கொடுமை, முதுமையில் ஆதரவு இல்லாமை போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பெற்றோர் திட்டியதால் இறந்த பிள்ளைகளும், பிள்ளைகள் திட்டியால் இறந்த பெற்றோரும், மனைவி திட்டியதால் கணவனும், கணவன் திட்டியதர் மனைவியும் தற்கொலை செய்தவர்களும் உண்டு.
விழிப்புணர்வு தேவை
ஒவ்வொரு மனிதர்களும் இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக் கூடியவர்கள் தான். மனித உயிர்கள் விபத்தில் பலியாவதால் அதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்து தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுக்காக போலீஸ் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காகவே நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.
அதேபோல், அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஏதோ ஓர் விரக்தியில், இழப்பில், கவலையில் தற்கொலையை நாடுகின்றனர். ஆனால், அந்த விரக்தி, கவலை, இழப்புகளுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற புரிதலை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளிலும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் உருவாகிறது? தற்கொலையை அதில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்ட மனநல டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:-
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையைப் பெருமளவு தடுத்துள்ளன. உதாரணமாக, பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் எளிதில் கிடைப்பதைத் தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்குச் சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கச்செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கச்செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலைசார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக, கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்களில் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம், இதன்மூலம் தற்கொலை பற்றிய மக்களின் களங்கவுணர்வைக் குறைக்கலாம்.
தனிமையை தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே, மனதளவில் பாதிப்பு ஏற்படும் போது தனிமை தற்கொலைக்கு இழுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம். கூடுமான வரை தனிமையை தவிர்த்தல் நல்லது. ஒவ்வொரு உயிரை காப்பாற்றுவதற்கும் தான் டாக்டர்கள் இறுதி வரை போராடுகின்றனர். தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை நன்கு கலந்து அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பைச் சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கைத் தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கதிர்மாயா
குறிப்பு:- தினத்தந்தி திண்டுக்கல் பதிப்பில் வெளியான கட்டுரை
நாள்:- 03-11-2018

கருத்துகள்
கருத்துரையிடுக