முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு:
போக்சோ சட்டத்தில் 109 வழக்குகள்



தேனி மாவட்டத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று காலம் காலமாக பெருமிதமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கண்கள் பிஞ்சுப் பருவத்திலேயே நசுக்கப்பட்டு, நரக வேதனைக்குள்ளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையானது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சம் பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பதில் தேனி மாவட்டமும் விதிவிலக்கில்லை. இங்கும் சில ஆண்டுகளாக இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலோ, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டாலோ இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
109 வழக்குகள்
அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் மொத்தம் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 113-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை பொறுத்தவரை 2 காரணங்களை முக்கியமாக பார்க்க வேண்டியது உள்ளது. முதலாவது  சிறுமிகள் வீடுகளில் தனியாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி உள்ளனர். 2-வதாக பள்ளிப் பருவத்தில் காதல் என்ற மாயையில் விழுந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். வளர்இளம் பருவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஆசை வார்த்தைகளை நம்பியும் காதல் வயப்பட்டு சீரழிவில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. இது, பள்ளிப் பருவத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததை காட்டுகிறது.
விழிப்புணர்வு தேவை
எனவே, வளர்இளம் பருவம் குறித்தும், இந்த பருவ காலத்தில் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதற்கு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு, அதற்குரிய கடுமையான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி அளவோடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நின்று விடாமல் பொதுமக்களையும் நேரடியாக சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 50 வயதை கடந்தவர்களே அதிகம் உள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்று விடும் போது, பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்து சிறுமிகள் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதும், பின்னர் வெளியே சென்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. எனவே, கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளிலும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சட்டங்கள், தண்டனைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

''2 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்''
போலீஸ் சூப்பிரண்டு தகவல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும், இதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பாலியல் குற்றங்களை தடுக்கவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையும் தண்டனை வழங்கப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ல் உள்ள உட்பிரிவுகள் கடுமையாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மரண தண்டனை வரை விதிக்கப்படும். 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும். புதிய நடைமுறைப்படி 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். போலீஸ் துறை சார்பில் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றப்பத்திரிகை தயாரித்து துரிதமாக தாக்கல் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு போதிய விழிப்புணர்வுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் என்றால் என்ன? கெட்ட கொடுதல் என்றால் என்ன? என்பது குறித்தும், கொட்ட எண்ணத்தோடு யாரேனும் அணுகினால் அங்கிருந்து தங்களை தற்காத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கதிர்மாயா

குறிப்பு:- தினத்தந்தி திண்டுக்கல் பதிப்பில் வெளியான கட்டுரை

நாள்:- 28-10-2018



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு

கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார். கவுதமன் பேட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்து...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...