முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதயம் வரை இறங்கிய இனிப்பே மீண்டு(ம்) வா!

'மதினி, நீங்க அச்சு முருக்கு போட்டா தான் உடையாமல் வரும். இங்கிட்டு வந்து உட்காருங்க' என புத்தாடை அணிந்து வந்த அண்ணன் மனைவியை, புகைந்து கொண்டு இருக்கும் விறகு அடுப்புக்கு பக்கத்தில் உட்கார வைப்பதில் நாத்தனாருக்கு தனி சந்தோஷம். 'அரிசி முருக்குக்கு மாவு பிசைய சொன்னால், கூழ் காய்ச்சி வச்சிருக்கா பாரேன்' என நாத்தனாரை வம்புக்கு இழுப்பதில் மதினிக்கும் மகிழ்ச்சி பொங்கும்.
இவை எல்லாம் பண்டிகை காலங்களில் வீடுகளில் நிகழும் சுவாரஸ்யங்கள். ஆனால், இது எல்லாம் ஒரு காலத்தில் என்று சொல்லும் அளவுக்கு மக்களின் வாழ்வியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலகாரத்துக்காக ஒரு பண்டிகை என்றால் அதை தீபாவளி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பலகாரம் இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அதிரசம், முருக்கு, அச்சு முருக்கு, சீடை, வடை, பஜ்ஜி போன்றவை தான் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் பலகாரமாக இருக்கும். பிற்காலங்களில் தான் குலோப்ஜாமூன் இந்த பட்டியலில் இடம் பிடித்தது. பல வீடுகளில் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு போட்ட சண்டைகள் எல்லாம் பலகாரம் செய்யும் பரபரப்பில், பாசத்தில் காணாமல் போயிருக்கும். அடுப்பில் இருந்து எடுத்து வைத்த அதிரசத்தை சூடு ஆறும் முன்பே காலி செய்து இருப்பார்கள் வீட்டில் உள்ள சுட்டி வாண்டுகள்.
அரிசி மாவு, வெல்லம், எள், ஏலக்காய் மட்டும் இன்றி அன்பும், பாசமும் அச்சு முருக்கு, அதிரசத்தில் அதிகம் கலந்திருக்கும். அது சுவையை கூட்டும். இதில் அச்சு முருக்கு போடுவது என்பது பல குடும்பங்களை இணைக்கும். 'ஏலேய்... பட்டாசு வெடிச்சது போதும். அத்தை வீட்டுக்கு போயி அச்சு முருக்கு செய்யும் அச்சு வாங்கிட்டு வாடா' என மகனை கெஞ்சிய தாய்மார்கள் பலர். அவர்கள் இன்றைக்கு பாட்டியாகி இருப்பார்கள். ஏனெனில் இது எல்லாம் தான் அந்தக் காலமாச்சே.
உறவினர் வீட்டுக்கு அச்சு கம்பி வாங்கச் சென்று, அங்கும் அச்சு முருக்கு சுட்டுக் கொண்டு இருந்தால், காத்திருந்து வாங்கி அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். அதிலும், 'கை எல்லாம் வெடி மருந்தாய் இருக்கு. கை, கால் கழுவிட்டு வந்து இதை சாப்பிடு' என அத்தையோ, சித்தியோ, பெரியம்மாவோ யாரேனும் ஒருவர் தட்டு நிறைய பலகாரத்தை கொண்டு வந்து கொடுத்திருப்பார். வாய் வலிக்க முருக்கை கடித்து தின்றுவிட்டு, அதிரசத்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டே அச்சு கம்பியை வாங்கி வந்த நினைவுகள் இன்றும் பலருக்கு பசுமையாய் வந்து போகும்.
பக்குவமாய் செய்த பலகாரத்தை பாத்திரத்தில் அடைத்து பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த தெருவில் உள்ள சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு எல்லாம் கொடுத்து அனுப்புவர். கொடுக்கச் சென்ற இடத்தில் அவரவர் வீடுகளில் செய்த பலகாரங்களை கொடுத்து விடுவர். இவ்வாறு பலகார மாற்று பந்தம் பல குடும்பங்களை வலுவாய் இணைத்தே வைத்திருந்தது. பல மனக்கசப்புகளை தீபாவளி பலகாரங்கள் தீர்த்து வைத்திருந்தது.
காலம் தான் மாறிவிடுகிறதே. காலத்துக்கு ஏற்ப நாமும் தான் மாறி விட்டோமே. முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் கடைகளில் பலகாரம் வாங்குவது அரிதாக இருந்தது. இன்றைக்கு வீடுகளில் பலகாரம் செய்வது அரிதாகி விட்டது. கடையில் வாங்கி வந்த பலகாரங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். இதற்காக கடைக்காரர்களும் முன்கூட்டியே பலகாரங்களை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர். மாவை வாங்கி பிசைந்து, தேவையான பொருட்களை சேர்த்து, அடுப்பை பற்ற வைத்து, வேக வைத்து எடுத்து கொடுப்பதை விட, பாக்கெட்டிலோ, அட்டைப் பெட்டியிலோ அடைத்து வைத்த பலகாரத்தை வாங்கி தானும் தின்று, உறவினர்களுக்கும் கொடுத்து வரு-வது வாடிக்கையாகி விட்டது.
ஆயிரம் இருந்தாலும், வீட்டில் செய்து உறவினர்களுக்கு கொடுக்கும் பலகாரத்தின் இனிப்பு இதயம் வரை இறங்கியது. அது கார வகைகளாக இருந்தாலும் இதயம் வரை தித்தித்தது. ஆனால், தற்போது கடைகளில் வாங்கிக் கொடுக்கும் பலகாரங்களின் சுவை நாவோடு நின்று விடுகிறது. பழைய பாரம்பரியத்தை இன்னும் இழந்துவிட வில்லை. இதயம் வரை இனிக்கும் பலகாரங்களோடு இந்த தீபாவளி நினைவுகள் இனிமையாய் இதயத்தில் தங்கட்டும்.

- கதிர்மாயா

குறிப்பு: 2018-ம் ஆண்டு 'தினத்தந்தி' தீபாவளி சிறப்பு மலரில் வெளிவந்த  கட்டுரை


நாள்:- 06-11-2018



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு

கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார். கவுதமன் பேட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்து...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...